உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 60 ஆண்டு அரசியலை விஜயும் செய்ய வேண்டாம்! எஸ்.ஏ.சி அறிவுரை

60 ஆண்டு அரசியலை விஜயும் செய்ய வேண்டாம்! எஸ்.ஏ.சி அறிவுரை


முதல்வர் விஜய் நேற்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை தவெக.,வினர் தமிழகம் முழுக்க பெரிய அளவில் கொண்டாடினார்கள். அதோடு, சில கோவில்களிலும் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், விஜயின் தந்தையான இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீடியாக்களை சந்தித்தார்.

அப்போது, ''ஒரு மகனை பெற்ற தந்தை என்ற முறையில் அவர் ஒரு முதல்வராக உயர்ந்து நிற்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். தனக்காக வாழ்வதைவிட பிறருக்காகவும், இந்த நாட்டு மக்களுக்காகவும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை. அதைத்தான் தற்போது விஜய் செய்கிறார்'' என்று கூறிய எஸ்.ஏ.சந்திர சேகரனிடத்தில், 'விஜய் அரசியல் மேடைகளில் அதிகமாக பேசுவதில்லையே?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ''இந்த தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக பேசிப் பேசியே நாட்டை கெடுத்து விட்டார்கள். அதையே விஜய்யும் செய்ய வேண்டுமா? பேசுவது முக்கியமா? மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது முக்கியமா? அதை செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசிவிட்டு எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்றுவதை விட அதிகமாக பேசாமல், தான் சொன்னதை செய்து காட்டுவது தான் நல்ல தலைவருக்கு அழகு. அதைத்தான் தற்போது விஜய் செய்து கொண்டு இருக்கிறார்.
அதனால் அவர் வீணாக பேச வேண்டிய அவசியம் இல்லை. அதோடு விஜயை பொருத்தவரை ஆட்சி அதிகாரத்தை அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்கிறார். அதிகார பகிர்வு செய்துள்ளார். தான் அரசியலுக்கு வந்தவுடன் அனைவரையும் அரவணைத்து செல்கிறார். அனைவருடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதுதான் மிகச்சிறந்த செயல்பாடு ஆகும். விஜய்யினால் இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கப் போகிறது. மக்கள் கொடுத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !