உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜய் பிறந்தநாள், அவருடன் கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா

முதல்வர் விஜய் பிறந்தநாள், அவருடன் கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா

முதல்வர் விஜய் நேற்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்தினர். சில ஆண்டுகளாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வந்தார் நடிகை திரிஷா.

விஜய் முதல்வராவதற்கு முன்பே திருமண நிகழ்வில் இருவரும் ஒரே நிற ஆடையில் பங்கேற்றனர். தொடர்ந்து முதல்வர் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் திரிஷா அமர்ந்திருந்தார். நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு இருவரும் ஒன்றாக வந்தனர். இவையெல்லாம் அந்த சமயங்களில் விவாதமானது. இப்படியான சூழலில் இந்தாண்டு விஜய்க்கு திரிஷா பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை, இன்ஸ்டாவில் அவரை அன்பாலோ செய்ததாக செய்தி பரவியது.

இந்நிலையில் முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு அவருடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவை திரிஷா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதன் உடன் ‛‛எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்'' என குறிப்பிட்டு அன்பின் வெளிப்பாடான ஹார்ட்டின் மற்றும் எப்போதும் வெளியிடும் கண் வடிவிலான எமோஜியையும் பகிர்ந்துள்ளார். சரியாக இரவு 12 மணிக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்து இருக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !