மம்முட்டிக்கு பத்மபூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ : ஜனாதிபதி வழங்கினார்
கலை, சமூகசேவை, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டில் இந்த விருதுக்கு தேர்வானோரின் விவரங்கள் ஜன.26ம் தேதி அறிவிக்கப்பட்டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 66 பேருக்கு (பத்ம விபூஷண் 2, பத்ம பூஷண் 6, பத்மஸ்ரீ 58) மே 25ம் தேதி முதல்கட்டமாக விருதுகள் வழங்கப்பட்டன.
இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் 65 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். அதில் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி 'பத்ம பூஷண்' விருதினை ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார். அதேபோல், பின்னணி பாடகி அல்கா யாக்னிக் பத்ம பூஷண் விருது பெற்றார். நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.