'வாரணாசி' பிரேக்: குடும்பத்துடன் பிரான்ஸ் சென்ற மகேஷ் பாபு!
ADDED : 5 hours ago
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடித்து வரும் படம் 'வாரணாசி'. இப்படத்தில் ருத்ரா என்ற போர்வீரன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கும் நிலையில், பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமாரன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது கோடை விடுமுறை கொடுத்திருக்கிறார் ராஜமவுலி.
அதன் காரணமாக தனது மனைவி நர்மதா, மகன் கவுதம், மகள் சித்தாரா ஆகியோருடன் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் மகேஷ் பாபு. விமான நிலையத்துக்கு அவர்கள் வந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அடுத்த படியாக ஜூலை மாதம் முதல் வாரணாசி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.