உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசன் படத்தின் முக்கிய படப்பிடிப்பு முடிந்தது : சிம்பு

அரசன் படத்தின் முக்கிய படப்பிடிப்பு முடிந்தது : சிம்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அரசன். வட சென்னை கதை களத்தில் உருவாகி வரும் இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது. சிம்புவுடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர், விக்ராந்த், யோகலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், தற்போது தனது பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் சிம்பு. அதில், இந்த அரசன் படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதாவது இப்படத்தின் பிக் செக்யூரிட்டி முடிவடைந்துவிட்டது என்று கூறியுள்ளார். அடுத்து சற்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகப் போகிறோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !