உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 46 வயதில் கல்லூரி மாணவனாக நடிக்கும் பிரபாஸ்

46 வயதில் கல்லூரி மாணவனாக நடிக்கும் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தற்போது ‛கல்கி பார்ட் 2, பவுசி, ஸ்பிரிட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியான 'அனிமல்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா ஸ்பிரிட் படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக த்ரிப்தி திம்ரி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பிரபாஸ் மற்றும் த்ரிப்தி திம்ரி சம்பந்தப்பட்ட கல்லூரி காலத்துக் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பு தளத்தில் இருந்தும் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளன. 46 வயதான பிரபாஸ் கல்லூரி மாணவனாக நடிப்பது ஆச்சரியமான விஷயம் தான். இந்த படத்தில் பிரபாஸ் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதால், அவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக்கில் இந்த கல்லூரி காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !