'அரூபி' படத்தில் இரு வடநாட்டு நாயகிகள்
புணர்த்தம் புரொடக்ஷன் சார்பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்ள படம் 'அரூபி'. ஜாய் மேத்யூ, விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக் ஷி பாதலா, சிந்து வர்மா, கிரண் ராஜ், கண்ணன் சாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். ஆமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ளார். மலையாளத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. இரண்டு மொழிகளிலும் நாளை வெளியாகிறது.
இந்த படத்தின் மூலம் இரண்டு வடநாட்டு நாயகிகள் அறிமுகமாகிறார்கள். படம் குறித்து நேஹா சாவ்லா கூறும்போது, 'நான் டில்லியை சேர்ந்தவள். ஹாரர் படமான இது, 300 ஆண்டுகள் பழமையான வீட்டில் படமாக்கப்பட்டது” என்றார்.
சாக்ஷி படாலா கூறுகையில், ''பேசும் மொழி எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனினும், மலையாளத்தில் எனது முதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாடலின் அர்த்தம் புரியவில்லை என்றாலும், அதன் வரிகளை கற்றுக்கொண்டு சிறப்பாக நடனமாடினேன். தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை முதல் மலையாளப் படத்திலேயே கிடைத்துள்ளது” என்றார்.