உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் படத்தில் 12 கட் : அது பற்றிய விபரம் இதோ...

ஜனநாயகன் படத்தில் 12 கட் : அது பற்றிய விபரம் இதோ...

முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று தெரிகிறது. படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது. விஜய் ரசிகர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்தோடு தியேட்டரில் படம் பார்க்க முடியாது. இதனால் வசூல் கடுமையாக பாதிக்கும் என்பதால் 'யுஏ' சான்றிதழ்பெற தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் பற்றிய முழு விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தில் 12 இடங்களில் கட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

1.புத்தகத்தின் அட்டைப் படத்தில் டாக்டர் அம்பேத்கர் காட்டப்படும் காட்சிகள் மாற்றம்.

2. டிவிகே என்ற சொல் பயன்படுத்தப்பட்ட இடங்கள் அனைத்திலும் அது நீக்கப்பட்டது.

3. இந்திய தேசியக் கொடி தரையில் விழும் காட்சிகள் நீக்கப்பட்டன.

4. பாகவதம் மற்றும் ரங்கநாதர் ஆகிய சொற்கள் மியூட் செய்யப்பட்டன.

5. இரு அநாகரிக வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டன

6. ஓம் என்று உச்சரிக்கப்படும் இடங்கள் மற்றும் 'ஆபரேஷன் மெலுஹா' பற்றி விளக்கும்போது வரும் நியூ இந்தியா ஆகிய சொற்கள் நீக்கப்பட்டன. மேலும், சதாம் உசேன் தூக்கிலிடப்படுவது தொடர்பான தூக்குல துடிக்கிறத... அவனே மீடியால லீக் பண்ணி என்ற வசனம் ஒலியடக்கப்பட்டது.

7. டிசி அலுவலகத்தின் சின்னம்/பேட்ஜ் அவமரியாதையாக கீழே தள்ளப்படும் காட்சி நீக்கப்பட்டது.

8. பொண்ணோட... கொடுத்து வச்சிருக்கணும், உடம்பு இருக்குன்னு என்ற முழு வசனமும் ஒலியடக்கப்பட்டது.

9. இந்தியாவை என் கால்ல விழ வைக்கிறேன் என்ற சொற்கள் ஒலியடக்கப்பட்டன.

10. குழந்தை எரிக்கப்படும் காட்சிகள் நீக்கப்பட்டு மாற்றப்பட்டன.

11. சிலுவை என்ற சொல் ஒலியடக்கப்பட்டது.

12. ஷீலா ராணி என்ற பெயர் உச்சரிக்கப்படும் இடங்கள் அனைத்திலும் அது மாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !