உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவினுக்கு இரட்டை குழந்தை : இரட்டிப்பு மகிழ்ச்சி என பதிவு

கவினுக்கு இரட்டை குழந்தை : இரட்டிப்பு மகிழ்ச்சி என பதிவு

டிவியில் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நாயகனாக வலம் வருபவர் கவின். லிப்ட், டாடா, பிளடி பெக்கர், கிஸ், மாஸ்க் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கவின் இப்போது நயன்தாரா உடன் ‛ஹாய்' படத்தில் நடித்துள்ளார். அடுத்த மாதம் 14ம் தேதி ஹாய் வெளியாக உள்ளது.

கவினுக்கும் தனியார் பள்ளியில் பணியாற்றிய மோனிகாவுக்கும் ஆகஸ்ட் 20ம் தேதி, 2023ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம். தனது நீண்டகால தோழியை திருமணம் செய்தார் கவின்.

இந்நிலையில், இன்று கவின், மோனிகா தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதை, ''எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளனர்'' என்று அவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !