10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் 'குப்பி' கூட்டணி
ADDED : 5 hours ago
10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'குப்பி' படம் டொவினோ தாமஸின் திரைப் பாதையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் 'தேஜஸ் வர்க்கி' எனும் பொறியாளராக அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல், இந்த படத்தின் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜுக்கு ஒரு கனவு அறிமுகப் படமாக அமைந்து, மலையாள திரையுலகில் சிறந்த இயக்குநராக அவரை அடையாளம் காட்டியது.
'குப்பி' திரைப்படத்தின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு, அதே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. இது மலையாள சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.