உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை பெரிதும் நம்பும் காஜல் அகர்வால்

பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை பெரிதும் நம்பும் காஜல் அகர்வால்

திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள காஜல் அகர்வால் பல படங்களில் ஒப்பந்தமான போதிலும், ஒரு படத்தை தவிர மற்ற அனைத்தும் தோல்வியடைந்தன. குறிப்பாக சிக்கந்தர், தி இந்தியா ஸ்டோரி என அவர் பெரிதும் எதிர்பார்த்த படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தன. இந்த தொடர் ஏமாற்றங்கள் அவரது திரை வாழ்க்கையில் பெரும் அழுத்தத்தை உருவாக்கி உள்ளதால் வரவிருக்கும் படங்கள் அவருக்கு மிகவும் முக்கியமானவையாக மாறியுள்ளன.

இதன் காரணமாக, நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111வது படத்தின் மீது காஜல் அகர்வால் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார். இப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஒரு கண்ணியமான மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் காஜல் நடிக்கிறார். பகவந்த் கேசரி படத்தின் வெற்றிக்குப் பிறகு மூத்த நடிகரான பாலகிருஷ்ணாவுடன் அவர் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். வணிக ரீதியாக வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருப்பதாக இப்படம் தனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று பெரிதும் நம்புகிறார் காஜல். இதுதவிர, ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களிலும் மண்டோதரி வேடத்தில் அவர் நடித்துள்ளார்.

பாலகிருஷ்ணாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவரது 111வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது. மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதால், படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் இப் படத்தின் வெளியீடு 2026-லிருந்து 2027-ஆம் ஆண்டிற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !