உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா

மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா

தமிழில் முதல்வர் விஜய் நடித்த ‛தமிழன்' படம் மூலம் சினிமாவில் நுழைந்து, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து, பின்னர் ஹாலிவுட் வரை முத்திரை பதித்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தன்னை விட வயது குறைவான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஏராளமான ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்தொடரில் நடித்துள்ளார். தற்போது ராஜமவுலியின் ‛வாரணாசி' படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ‛புளுபிளை' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் சயின்ஸ், பிக் ஷன் கலந்த ஆக் ஷன் படமாக உருவாகிறது. நிம்ரோட் ஆண்டல் இயக்குகிறார். ஆஸ்கர் விருது பெற்ற ரஸ்ஸல் குரோவ் ஹீரோவாக நடிக்கிறார். காங்கோ காடுகளில் விழுந்து நொறுங்கிய ஒரு விமானத்தை மீட்கும் ரகசிய நடவடிக்கையை மையமாக கொண்டு உருவாகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !