மோகன்லாலின் மகள் அறிமுகப் படம் ரிலீஸ்: மம்முட்டி வாழ்த்து
பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில், குறிப்பாக நடிப்பு துறையில் அடியெடுத்து வைக்கும் நடைமுறையில், தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மயா 'தொடக்கம்' என்கிற படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான '2018' என்கிற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இதை இயக்கியுள்ளார். மோகன்லால் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் இன்று வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து விஸ்மயாவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் மம்முட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திரையுலகில் அறிமுகமாகும் அன்புக்குரிய விஸ்மயா மோகன்லாலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும் என்று கூறியுள்ளார்.
அதேபோல, விஸ்மயாவின் தோழியான கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்டுள்ள பதிவில், ஆல் தி பெஸ்ட் மை மாயூஸ்.. எப்போதுமே உனக்கு ஆதரவாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.