ஹாய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அப்டேட்
ADDED : 3 hours ago
பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ஹாய்'. கவின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வித்தியாசமான காதல் கதையில் தயாராகி உள்ள இப்படம் ஆக., 14ல் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
ஆனால் அன்றைய தினம் ஆகஸ்ட் 14ம் தேதியன்று சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', மற்றும் விஷால் நடித்துள்ள 'மகுடம்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன. அந்தப் படங்களுடன் மோதினால் சரியான தியேட்டர் கிடைக்காது என்பதாலும், சில நிதி சிக்கலாலும் படம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக செய்தி வந்தது.
இந்நிலையில் புதிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி படம் ஆக., 14க்கு பதில் ஆக., 28ல் வருவதாக வீடியோ ஒன்றைய வெளியிட்டு அறிவித்துள்ளனர்.