உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதலமைச்சர் விஜயின் செயல்பாட்டை பாராட்டிய மாதவன்

முதலமைச்சர் விஜயின் செயல்பாட்டை பாராட்டிய மாதவன்

2000-களின் தொடக்கத்தில் தென்னிந்திய சினிமாவின் மிகவும் விரும்பப்படும் நடிகராக இருந்தார் மாதவன். அலைபாயுதே, ரன், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களும், மணிரத்னத்துடனான அவரது கூட்டணியும் அவருக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

தற்போது மாதவன் ஒரு பான்-இந்திய நடிகராக வலம் வருகிறார். ராக்கெட்ரி, துரந்தார் படங்கள் அவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தன. அந்த வகையில் டோலிவுட், பாலிவுட்டில் பிரபலமான இருக்கும் மாதவன், தற்போது துபாயில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 7ம் தேதியான இன்று வெளியாகியுள்ள தனது ஜிடிஎன் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின்போது, விஜய்யின் வளர்ச்சியை பாராட்டிப் பேசினார் மாதவன். அவர் கூறுகையில், தமிழ் நாட்டில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிறப்பான ஆட்சி நடக்கிறது. எனக்கு விஜய்யை நன்றாகத் தெரியும். என் நண்பர் விஜய் முதல்வர் விஜய் ஆகியிருக்கிறார் என்று என்னால் பெருமையுடன் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !