உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராமாயணா' - ஒரு பில்லியன் பார்வைகள் கடந்த டிரைலர்

'ராமாயணா' - ஒரு பில்லியன் பார்வைகள் கடந்த டிரைலர்


நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராமாயணா'. பான் இந்தியா திரைப்படமா நவம்பர் 6ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பாக இப்படத்தின் டிரைலரை வெளியிட்டார்கள். அது தற்போது ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நமித் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரான ஒரு படம் இப்படி ஒரு சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல் முறை. யு டியூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம், இதர சமூக வலைதளங்கள் என அனைத்துப் பார்வைகளையும் சேர்த்து இப்படி ஒரு சாதனையைப் படைத்திருக்கிறது.

இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டுமே 750 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். யுடியூப் தளத்தில் மட்டும் டிரைலர் வெளியான நாளிலிருந்து குறைவான பார்வைகளே கிடைத்துள்ள நிலையில் இதர தளங்களில் அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளத்தில் மிக அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் இளம் ரசிகர்கள் இதை ஆர்வத்துடன் விரும்பிப் பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், உலக அளவில் இப்படத்தை 59 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !