உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஸ்பைடர்மேன்' - வரிசைப் படங்களின் வசூல் என்ன?

'ஸ்பைடர்மேன்' - வரிசைப் படங்களின் வசூல் என்ன?


ஒரே வாரத்தில் ஒரு பில்லியன் வசூல் சாதனையை கடந்த வாரம் வெளியான 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ' படம் படைத்துள்ளது. இந்தியாவில் மட்டுமே இப்படம் இந்த வார இறுதியில் 500 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமிக்ஸ் புத்தக வடிவில் பிரபலமான ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 2002ம் ஆண்டு 'ஸ்பைடர்மேன்' படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. அப்படம் மொத்தமாக 826 மில்லியன் யுஎஸ் டாலர் தொகையை வசூலித்தது.

அது மட்டுமல்ல வெளியான ஒரே நாளில் அமெரிக்காவில் 43 மில்லியன் டாலர் வசூலித்தது. வெளியான ஒரே நாளில் அதிக வசூல் பெற்ற படமாக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது.

அதற்கடுத்து பல்வேறு உப தலைப்புகளுடன் ஸ்பைடர்மேன் வரிசைப் படங்கள் வெளிவந்துள்ளன.

இதுவரையில் வெளியான அப்படங்களின் வசூல் நிலவரம்…

2002 - ஸ்பைடர்மேன் - 823 மில்லியன் யுஎஸ் டாலர்

2004 - ஸ்பைடர்மேன் 2 - 797 மில்லியன்

2007 - ஸ்டபர்மேன் 3 - 896 மில்லியன்

2012 - தி அமேசிங் ஸ்பைடர்மேன் - 758 மில்லியன்

2014 - தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2 - 709 மில்லியன்

2017 - ஸ்பைடர்மேன் - ஹோம் கமிங் - 878 மில்லியன்

2018 - ஸ்பைடர்மேன் - இன்டு தி ஸ்பைடர் வெர்ஸ் - 373 மில்லியன்

2019 - ஸ்பைடர்மேன் - பார் பிரம் ஹோம் - 1.13 பில்லியன்

2021 - ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம் - 1.92 பில்லியன்

2023 - ஸ்பைடர்மேன் - அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் - 690 மில்லியன்

2026 - ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே - 1.19 பில்லியன் (ஓடிக்கொண்டிருக்கிறது)

இதற்கடுத்து 2027 ஜுன் 18ல் 'ஸ்பைடர்மேன் பியாண்ட் ஸ்பைடர் வெர்ஸ்' படம் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !