உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படம் தயாரித்து நஷ்டம்: புலம்பும் இசையமைப்பாளர் - நடிகர்

படம் தயாரித்து நஷ்டம்: புலம்பும் இசையமைப்பாளர் - நடிகர்


தான் நடிக்கும் பல படங்களை தயாரித்து நடித்துள்ள, இசையமைப்பாளராக இருந்து நடிக்க வந்த நடிகர், தன் படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதால், நடித்து சம்பாதித்து வாங்கிய இரண்டு வீடுகளை விற்று விட்டார். அதோடு, சில பைனான்சியர்களிடம் கடன் வாங்கி, படம் எடுத்தும் வசமாக சிக்கியிருக்கிறார். அதன் காரணமாக, இனிமேல் சொந்த படம் எடுக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ள இசையமைப்பாளரான நடிகர், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், 'படங்களில் நடிக்க நான் தயார். ஆனால், தயாரிப்பாளரை நீங்கள் தான் தேடிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து படம் தயாரித்தால், நான் பிச்சைக்காரனாகி, வீதிக்கு வந்து விடுவேன்...' என்று சொல்லி புலம்பி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !