உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு ஐமேக்ஸ் படங்களில் நடித்த ஒரே கன்னட நடிகர் யஷ்

இரண்டு ஐமேக்ஸ் படங்களில் நடித்த ஒரே கன்னட நடிகர் யஷ்

யஷ் நடித்துள்ள டாக்சிக் படம், ஆகஸ்ட் 26ம் தேதி உலகளவில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஐமேக்ஸ் வடிவத்திலும் வெளியாகும் என்பது புதிய அப்டேட் ஆகும். ஏற்கனவே யஷ் நடித்த ‛கேஜிஎப்' படம் ஐமேக்ஸில் வெளியான நிலையில், அதையடுத்து ஐமேக்ஸ் வடிவில் வெளியாகும் இரண்டாவது கன்னட திரைப்படம் இதுவாகும். தனது இரண்டு படங்களை இந்த உயர்தர ஐமேக்ஸ் வடிவில் வெளியிட்ட ஒரே கன்னட நடிகர் என்ற பெருமையை இதன் மூலம் யஷ் பெறுகிறார்.

நாடு முழுவதும் விரைவில் ஐமேக்ஸ் மற்றும் பிற வடிவங்களுக்கான முன்பதிவு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவினர் மிகப்பெரிய திரையரங்க வெற்றியை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இந்த ஆக் ஷன் படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !