பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்த பௌசி அப்டேட்
பிரபாஸ் நடிப்பில் இந்த ஆண்டு உருவாகி வரும் மிகப்பெரிய படங்களில் ஒன்று பௌசி. ஹனு ராகவபுடி இயக்கும் இப்படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் உருவாகி வருகிறது. சுதந்திர தினம் நெருங்கி வரும் வேளையில், இப்படம் தேசபக்தி மற்றும் தாய்நாடு சார்ந்த கதையமைப்பை கொண்டிருப்பதால், ரசிகர்கள் இப்படத்திலிருந்து ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் இந்த கிளிம்ப்ஸை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகினாலும், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பிரபாஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பாளர்கள் பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த படம் 2026 டிசம்பர் 3 ஆம் தேதி திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இமான்வி கதாநாயகியாக நடிக்க, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.