இரண்டு மெகா படங்களில் நடித்தும் புதிய படங்களில் கமிட்டாகாத சாரா அர்ஜுன்
பாலிவுட்டில் உருவான துரந்தர் படத்தின் மூலம் ரன்வீர் சிங் தனது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் மீட்டெடுத்து மிகப்பெரிய பான்-இந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். அப்படம் சாரா அர்ஜுனின் திறமைக்கும் மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்தது. படம் வெளியானபோது அவருக்கு 20 வயது மட்டுமே என்றாலும், படத்தின் முக்கிய பேசு பொருளாக அவர் மாறினார். இப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர் 2 இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
துரந்தர் 2 வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, யூபோரியா என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் சாரா அர்ஜுன். மேலும், துரந்தர் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சாராவை சுற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பெரிய படங்களுக்காக அவரை ஒப்பந்தம் செய்ய வரிசைகட்டி நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் இரண்டு பெரிய பாலிவுட் படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டாலும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
தெலுங்கு இயக்குநர்கள் அவருக்கான சரியான கதைகளுக்காகக் காத்திருக்கிறார்களா அல்லது பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்த சாரா அர்ஜுன் முடிவு செய்துள்ளாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.