உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனது டூப் நடிகரின் இதய அறுவை சிகிச்சை செலவை ஏற்ற சல்மான் கான்

தனது டூப் நடிகரின் இதய அறுவை சிகிச்சை செலவை ஏற்ற சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த பல வருடங்களாக பாடி டபுள் பணியில் ஈடுபடும் மாற்று நடிகராக பணியாற்றி வந்தவர் பர்வேஸ் காஜி. இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையின் போது இதயப் பிரச்சினை கண்டறியப்பட்டு, இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. இந்த தகவலை கேள்விப்பட்டதும் சல்மான் கான் உடனடியாக களத்தில் இறங்கி, மருத்துவமனை அனுமதி மற்றும் சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ ஏற்பாடுகளையும் நேரில் நின்று கவனித்துக் கொண்டார்.

மேலும், பர்வேஸின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கு தேவையான அனைத்து மருத்துவ முறைகளும் தடையின்றி கிடைப்பதற்கும் தனிப்பட்ட முறையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி உள்ள பர்வேஸ், சல்மான் கானின் இந்த மனிதாபிமான செயல் மற்றும் தன் மீது காட்டிய அக்கறை குறித்து நெகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். சல்மான் கானின் இந்த உதவி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !