உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லோகேஷிற்கு 4... யஷ்ஷிற்கு 0.5 : மகேஷ்பாபு மகன் கொடுத்த ரேட்டிங்கால் சலசலப்பு

லோகேஷிற்கு 4... யஷ்ஷிற்கு 0.5 : மகேஷ்பாபு மகன் கொடுத்த ரேட்டிங்கால் சலசலப்பு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் மகன் கவுதம் கட்டமனேனி படிப்பை முடித்த கையோடு சினிமாவில் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம், ஒவ்வொரு மொழியிலும் வெளியாகும் முக்கிய படங்களை எல்லாம் தவறாமல் பார்த்து விடுகிறார் கவுதம். அதுமட்டுமல்ல, சினிமா விமர்சனங்களை பதிவு செய்யும் பிரபல டிஜிட்டல் தளத்தில் தனி சுயவிவரக் கணக்கு வைத்துள்ளார் கவுதம். அதில் தான் பார்க்கும் படங்களுக்கு அவ்வப்போது ஸ்டார் ரேட்டிங்கும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் யஷ் நடிப்பில் வெளியான 'டாக்சிக்' படத்திற்கு அவர் 0.5 ஸ்டார் ரேட்டிங் வழங்கியுள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், லோகேஷ் கனகராஜின் 'டிசி' படத்திற்கு அவர் 4 ஸ்டார் ரேட்டிங் வழங்கியுள்ளார். அவரது தந்தை நடித்த 'போக்கிரி' மற்றும் '1: நேநொக்கடினே ஆகிய படங்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

ஒருவேளை பாரபட்சத்துடன் ரேட்டிங் கொடுக்கிறாரோ என்று நினைத்தால், தனது தந்தை நடித்த 'பிரம்மோற்சவம்' படத்திற்கு ஒரு ஸ்டார் மற்றும் அவரது சில படங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு ஸ்டார்கள் மட்டுமே வழங்கி, தான் நடுநிலையோடு செயல்படுவதையும் உறுதிப்படுத்தியுள்ளார் கவுதம் கட்டமனேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !