உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛நேச்சுரல் ஸ்டார்' பட்டத்துக்கு பொருத்தமானவர் நானி : கயாடு லோகர் பாராட்டு

‛நேச்சுரல் ஸ்டார்' பட்டத்துக்கு பொருத்தமானவர் நானி : கயாடு லோகர் பாராட்டு

நடிகை கயாடு லோகர் நடிப்பில் சமீபத்தில் ஒரே நாளில் ‛ஐ ஆம் கேம்' மற்றும் இம்மார்ட்டல் என இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக கயாடு லோகரின் நடிப்பும் அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழில் மாரி செல்வராஜ், சூர்யா ஆகியோரின் படங்களில் நடிக்கும் கயாடு, தெலுங்கில் நானி நடிக்கும் ‛தி பாரடைஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்படிப்பில் நானி உடன் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் அவர் கூறும் போது நேச்சுரல் ஸ்டார் என்கிற பட்டத்துக்கு பொருத்தமானவர் தான் நானி

“நானியின் நடிப்புத் திறமையும் கேமராவுக்கு முன்னால் அவர் காட்டும் சிரமமற்ற இயல்பான நடிப்பையும் பார்த்த பின்னர் தான் மக்கள் ஏன் அவரை நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கிறார்கள் என்பதன் உண்மையான அர்த்தத்தை நான் புரிந்து கொண்டேன். நானி மிகவும் இயல்பானவராகவும் எளிமையானவராகவும் இருப்பதால் அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் எளிதாக இருக்கிறது. அவரது நடிப்பு முறையையும் வேலை செய்யும் பாணியையும் உன்னிப்பாக கவனித்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கயாடு லோகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !