உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛சேயோன்' 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

‛சேயோன்' 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ், சீமான் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‛சேயோன்'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகர் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. மதுரை கதைக்களத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கிறது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்துள்ளது. இதுபற்றி ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‛‛வீரத்தின் வெற்றிப் பயணத்தில் இரண்டாம் கட்டம் நிறைவு'' என குறிப்பிட்டுள்ளனர். பொங்கலுக்கு படம் ரிலீஸாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !