உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026 : கேரளாவில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'

2026 : கேரளாவில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'

2026ம் ஆண்டில் மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள சில படங்கள் எதிர்பாராத வசூல் சாதனையைப் புரிந்துள்ளன. இதுவரையில் வெளியாகி உள்ள படங்களில் உலக அளவிலான மொத்த வசூலில் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் 300 கோடி வசூலை நெருங்கியுள்ளது. அதற்கடுத்து 'த்ரிஷ்யம் 3' 240 கோடி வசூலுடனும், 'வாழ 2' படம் 230 கோடி வசூலுடனும், 'ஆடு 3' படம் 120 கோடி வசூலுடனும் டாப் 4 இடங்களில் உள்ளன.

கேரளாவில் மட்டுமான வசூலில் இதுவரையில் வெளியான முந்தைய வருடப் படங்களுடன் சேர்த்து, 'வாழ 2' படம் 129 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்தது. அந்த வசூலை தற்போது 'பெத்லகேம் குடும்ப யூனிட்' முறியடித்து 130 கோடி வசூலுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேரளா மட்டுமான வசூலில் இதற்கடுத்து 3வது இடத்தில் 'லோகா' படம் 120 கோடி, 4வது இடத்தில் 'தொடரும்' 118 கோடி என முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

டாப் 10 வசூல் என்பதில் நிவின் பாலி நடித்து கடந்த வருடம் வெளியான 'சர்வம் மாயா' படம் 78 கோடி வசூலுடன் 10வது இடத்தில் உள்ளது. மலையாளத் திரையுலக வரலாற்றில் டாப் 10 வசூல் படங்களில் தற்போதைக்கு முதல் மற்றும் 10வது இடங்களில் நிவின் பாலி படங்கள்தான் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !