Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/பாதை மாறிய பயணம்!

பாதை மாறிய பயணம்!

பாதை மாறிய பயணம்!


PUBLISHED ON : ஜன 05, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜன 05, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ராணுவ வீரர்கள் மீது அளவுக்கு அதிகமான பாசமும், கரிசனமும் வைத்திருக்கிறாரே...' என, மத்திய இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ராஜிவ் சந்திரசேகர் குறித்து ஆச்சரியப்படுகின்றனர், சக அமைச்சர்கள்.

இவர், கேரளாவை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தை, இந்திய விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜிவ் சந்திரசேகர் தற்போது மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சராக உள்ளார்.

தந்தை, ராணுவத்தில்பணியாற்றியவர் என்பதால், இவருக்கும் ராணுவ வீரர்கள் மீது அலாதி பிரியம் உண்டு. இந்திய விமானப் படையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட, 'டகோடா' வகை சிறிய விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி, அதை சீரமைத்து, தன் தந்தை நினைவாக, அதை மீண்டும் விமானப் படைக்கே பரிசளித்தார், ராஜிவ் சந்திரசேகர்.

சமீபத்தில், 'பீல்டு மார்ஷல்' மானெக் ஷாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட, சாம் பகதுார் என்ற ஹிந்தி படம் வெளியானது. பாகிஸ்தானுடன் போர் நடத்தி, அதில் வெற்றி பெற்று, வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் தான், மானெக் ஷா.

சமீபத்தில் டில்லியில் ராணுவ வீரர்களை அழைத்து, அவர்களுக்காக இந்த படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டினார், சந்திரசேகர்.

'ராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டியவர், பாதை மாறி அரசியலுக்கு வந்து விட்டார் போலும்...' என நகைச்சுவையாக பேசுகின்றனர், சக அமைச்சர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap