Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ அதிகரிக்கும் 'மவுசு!'

அதிகரிக்கும் 'மவுசு!'

அதிகரிக்கும் 'மவுசு!'


PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், இவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு செல்வாக்கு...' என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள சக அரசியல்வாதிகள். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா நிறுவனரான மறைந்த பால் தாக்கரேயின் சகோதரர் மகன் தான், ராஜ் தாக்கரே. பால் தாக்கரேக்கு பின், ராஜ் தாக்கரே தான், சிவசேனா தலைவராவார் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், தன் மகன் உத்தவ் தாக்கரேவை அரசியல்வாரிசாக அறிவித்தார், பால் தாக்கரே. இதனால் அதிருப்தி அடைந்த ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை துவக்கினார். உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். ஆனால், எந்த தேர்தலிலும் இவரால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில் தான், பழைய பகையை மறந்து, உத்தவ் தாக்கரேவுடன் கைகுலுக்க தயாராகிவருகிறார், ராஜ் தாக்கரே. உத்தவ் தாக்கரேவும் இதற்கு சம்மதித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சு நடந்து வருகிறது.

இதையறிந்த பா.ஜ., சிவசேனா ஷிண்டே தரப்பு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், ராஜ் தாக்கரேவை மறைமுகமாக அணுகி, தங்களுடன் கூட்டணி வைக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிரா மக்களோ, 'ராஜ் தாக்கரேக்கு, 'மவுசு' அதிகரிக்குதே...' என, ஆச்சரியப்படுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap