Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அக்கம் பக்கம்/ கலக்கத்தில் வேணுகோபால்!

 கலக்கத்தில் வேணுகோபால்!

 கலக்கத்தில் வேணுகோபால்!


PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எத்தனை தோல்விகளை தான் சந்திப்பது... நீண்ட காலமாக பதவியில் இருப்பவர்களை மாற்றி விட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலிடம், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

காங்கிரஸ் தேசிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தாலும், முக்கிய முடிவுகளை எடுப்பது ராகுல் தான். ஆனால், கட்சி நிர்வாகிகள் யாரும், ராகுலை அவ்வளவு எளிதாக அணுகிவிட முடியாது.

கட்சியின் பொதுச்செயலரான வேணுகோபாலின் அனுமதி பெற்று தான் ராகுலை சந்திக்க முடியும். காங்கிரசின் அதிகார மையமாகவும் வேணுகோபால் திகழ்கிறார்.

தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்பது, கட்சியில் பதவி பெறுவது போன்றவற்றுக்காக, நாடு முழுதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், டில்லியில் உள்ள வேணுகோபால் வீட்டில் திரள்வது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்தில் பீஹார் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்வியால், வேணுகோபாலுக்கு எதிராக, மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

'கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்கள், அதன்பின் நடந்த பல மாநில சட்டசபை தேர்தல்கள் என, தொடர் தோல்விகளை கட்சி சந்தித்து வருகிறது. கட்சித் தலைவர்களை, வேணுகோபால் தவறாக வழி நடத்துகிறார்; அவரை முதலில் பதவியில் இருந்து துாக்குங்கள்...' என, மூத்த நிர்வாகிகள் பலரும், ராகுலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால், பதவி பறிபோகுமோ என்ற கலக்கத்தில் உள்ளார், வேணுகோபால்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap