தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மே 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உப்பு கூடினால் தப்பு

மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் உணவில் அதிக உப்பு சேர்ப்பவர்களுக்கு வயிறு புற்றுநோய்க்கான வாய்ப்பு 41 சதவீதம் அதிகம் என ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. ஏற்கனவே நடத்திய ஆய்வுகளில் சீனா, ஜப்பான், கொரியாவிலும் இது

உறுதி செய்யப்பட்டது. ஒரு நபருக்கு தினசரி சேர்க்கப்படும் உப்பின் அளவு 2300 மி.கி.,க்கு (தோராயமாக ஒரு டீஸ்பூன்) மிகாமல் இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு உணவுப்பொருள்களில் உப்பு அதிகமாக உள்ளதால் அமெரிக்கர்களின் தினசரி சராசரி உப்பு அளவு 3400 மி.கி., என உள்ளது.

தகவல் சுரங்கம்


அதிக நாடுகளின் கடல் எல்லை

பூமியில் பசிபிக், அட்லாண்டிக், இந்திய, தெற்கு, ஆர்க்டிக் என ஐந்து பெருங்கடல் உள்ளன. இதில் பரப்பளவில் இரண்டாவது பெரியது அட்லாண்டிக் பெருங்கடல். பரப்பளவு 8.5 கோடி சதுர கி.மீ. பூமியின் நிலப்பகுதியில் 17%, நீர்ப்பகுதியில் 24% இக்கடல் கொண்டுள்ளது. இது 'எஸ்' வடிவில் உள்ளது. வடக்கில் ஆர்க்டிக், தென் மேற்கில் பசிபிக், தென் கிழக்கில் இந்தியப்

பெருங்கடல், தெற்கில் தெற்கு பெருங்கடலுன் எல்லையை பகிர்கிறது. இதன் சராசரி ஆழம் 11,962 அடி. உலகிலுள்ள அதிக நாடுகள் தங்களது கடல் எல்லையாக, அட்லாண்டிக் பெருங்கடலை கொண்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us