/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : விண்வெளியில் அதிக நாள்
/
அறிவியல் ஆயிரம் : விண்வெளியில் அதிக நாள்
PUBLISHED ON : ஜூன் 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
விண்வெளியில் அதிக நாள்
பூமியில் இருந்து சராசரியாக 400 கி.மீ., உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் (ஐ.எஸ்.எஸ்.,) சுற்றுகிறது. நீளம் 358 அடி. அகலம் 239 அடி. வேகம் மணிக்கு 27,600 கி.மீ., 2024 ஜூன் படி 25 நாடுகளை சேர்ந்த 280 விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். சமீபத்தில் இந்தியாவின் சுபான்ஷூ உள்ளிட்ட 4 வீரர்கள் சென்றனர். அங்கு அதிகம் (1110 நாட்கள்) தங்கி ஆய்வில் ஈடுபட்டவர் ரஷ்ய வீரர் கொனென்கோ. இவரை தொடர்ந்து 'டாப் - 8' இடங்களிலும் ரஷ்ய வீரர்களே உள்ளனர். 9வது இடத்தில் அமெரிக்காவின் பெஜ்ஜி விட்சன் (678 நாட்கள்) உள்ளார். இவர் தற்போது அங்குதான் உள்ளார்.