/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : கொசு கடிப்பதன் காரணம்
/
அறிவியல் ஆயிரம் : கொசு கடிப்பதன் காரணம்
PUBLISHED ON : செப் 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
கொசு கடிப்பதன் காரணம்
உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்கள், மனிதர்களுக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக ஒருவரது வியர்வை, ரத்தம் உள்ளிட்டவற்றை பொறுத்து கொசுக்கள் கடிக்கின்றன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலை 500 பேரை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தது. அவர்களது உணவு முறை, பழக்க வழக்கம் குறித்து கேட்கப்பட்டது. இதில் சன்ஸ்கிரீன் பூசியவர்கள், பீர் குடித்தவர்களை கொசுக்கள் கடிப்பது, மற்றவர்களை விட 1.35 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.