/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : பிப் 02, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
உருகும் பனிப்பாறை
கிரீன்லாந்தில் 1985ல் இருந்து 5000 சதுர கி.மீ., பரப்பளவிலான பனிப்பாறை உருகியுள்ளது. இதன்படி மணிக்கு 3 கோடி டன் பனிக்கட்டி உருகி வருகிறது. இது ஏற்கனவே கணித்ததை விட 20 சதவீதம் அதிகம். இதன் காரணமாக கடல்நீர்மட்டம் அதிரிக்கும் ஆபத்து உள்ளது என நாசா ஆய்வு தெரிவித்துள்ளது. ஆர்டிக் - அட்லாண்டிக் கடல் இடையே கிரீன்லாந்து தீவு அமைந்துள்ளது. இது டென்மார்க்கின் ஒரு பகுதி. உலகின் பெரிய தீவு இதுதான். மூன்றில் ஒரு பங்கு பனிக்கட்டியால் ஆனவை. மக்கள்தொகை 56,583. இதுதான் உலகின் மக்கள் அடர்த்தி குறைந்த பகுதி.
தகவல் சுரங்கம்
உலக நன்செய் தினம்
மக்களுக்கும், பூமிக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நன்செய் நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி பிப். 2ல் உலக நன்செய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இயற்கை, மக்களுக்காக நன்செய் நிலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை' என்பது இந்தாண்டு மையக்கருத்து. அதிகம் நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யும் நிலங்கள் நஞ்சை நிலங்கள் என அழைக்கப்படுகின்றன. நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் இவ்வகை நிலத்தில் பயிரிடப்படுகின்றன. இன்றைய சூழலில் நன்செய் நிலங்களின் பரப்பளவு குறைகிறது.

