/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி உத்திரமேரூரில் வடிகால்வாய் சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி உத்திரமேரூரில் வடிகால்வாய் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி உத்திரமேரூரில் வடிகால்வாய் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி உத்திரமேரூரில் வடிகால்வாய் சீரமைப்பு
PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வண்ணாரத் தெருவில், நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, வடிகால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
உத்திரமேரூர் பேரூராட்சி, வண்ணாரத் தெருவில், 20 ஆண்டுக்கு முன், வடிகால்வாய் கட்டப்பட்டது. இந்த வடிகால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமலும், மண்ணாலும் குப்பையாலும் தூர்ந்த நிலையில் இருந்தது.
வடிகால்வாய் பல இடங்களிலும் உடைக்கப்பட்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் இருந்தது. இதனால், மழை நேரங்களில் வடிகால்வாயில் தண்ணீர் தடையின்றி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
மேலும், கால்வாயில் தேங்கும் மழைநீரால் தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு இருந்தது.
இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, 15வது நிதி ஆணைய மானிய திட்டத்தின்கீழ், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வடிகால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.