PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடப்பாக்கம்,:வெள்ளவேடு அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்டது கூடப்பாக்கம் ஊராட்சி.
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்து இந்த ஊராட்சிக்கு செல்லும் சாலையை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மோசமான நிலையில் இருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள் இந்த ஒன்றிய சாலையை ஊராட்சி நிதியில் 21.15 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.