/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
முதியோர் உதவி தொகை வருவாய் துறையினர் ஆய்வு 'தினமலர்' செய்தி எதிரொலி
/
முதியோர் உதவி தொகை வருவாய் துறையினர் ஆய்வு 'தினமலர்' செய்தி எதிரொலி
முதியோர் உதவி தொகை வருவாய் துறையினர் ஆய்வு 'தினமலர்' செய்தி எதிரொலி
முதியோர் உதவி தொகை வருவாய் துறையினர் ஆய்வு 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM
திருத்தணி:'தினமலர்' செய்தி எதிரொலியால் வருவாய் துறை அதிகாரிகள் முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகளிடம் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாவில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அரசின் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து, தகுதிவாய்ந்தவர்கள் என தனி தாசில்தார்களால் அங்கீகரிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டாகியும் உதவித் தொகை வராமல் காத்திருக்கின்றனர்.
மா வட்டத்தில், 8500க்கும் மேற்பட்ட பயனாளிகள் உதவித் தொகை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி அரசு உதவித் தொகை பெறுவதற்கு தகுதியானவர்களிடம் நேரில் சென்று ஆவணங்கள் சரிபார்த்து பட்டியல் தயாரித்து அனுப்பும்படி அந்தந்த தனிதாசில்தார்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தனி தாசில்தார்கள் தகுதிவாய்ந்த பயனா ளிகள் பெயர் மற்றும் விலாசத்துடன் கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, தனிதாசில்தார் ஒருவர் கூறியதாவது: உதவித் தொகை பெறுவதற்கு தகுதியான பயனாளிகளில், தற்போது அரசின் வேறு ஒரு திட்டத்தில் பயன்பெற்றுள்ளார்களா, உண்மையான விலாசத்தில் உள்ளார்களா, விண்ணப்பத்துடன் இணைத்த ஆவணங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம்.
தற்போது மாவட்டத்தில், 3,741 பயனாளிகளிடம் விசாரணை துவங்கி உள்ளோம். இவர்களுக்கு, நவம்பர் மாதம் முதல் அரசின் உதவித் தொகை வழங்குவதற்கு நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.