Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 27, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 27, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு: பிரதமர் மோடியை அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணன் அவதுாறாக பேசியது தொடர்பாக பா.ஜ., சார்பில் அளிக்கப்பட்ட புகார், டில்லி தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அவர் முழுமையாக விசாரித்து அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும்.

டவுட் தனபாலு: நீங்க புகாரை, டில்லிக்கு, 'பார்வர்டு' பண்ணிட்டீங்க...மாவட்ட தேர்தல் அலுவலர் தர்ற அறிக்கையையும் டில்லிக்கு தான் அனுப்புவீங்க... அவங்க அதை ஆய்வு பண்ணி, அனிதா ராதாகிருஷ்ணன் மேல நடவடிக்கை எடுக்கிறதுக்குள்ள தேர்தலே முடிஞ்சுடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி: ஆட்சியமைத்த போது, பெரிய நிதி நெருக்கடி இருந்தது. இருப்பினும், மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து, காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தினோம். 'மகளிர் உரிமை தொகை' திட்டத்தில், ஒரு சில குறைபாடுகள் உள்ளன. தேர்தல் முடிந்த பின், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும், மகளிர் உரிமை தொகை திட்டம் சென்றடையும்.

டவுட் தனபாலு: 'எல்லா பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை' என வாக்குறுதி தந்துட்டு, அதை தரும்போது, ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் விதிச்சு, பலரை கழற்றி விட்டதை, யாரும் இன்னும் மறக்கலை... அவங்களை தாஜா செய்யவே பழைய வாக்குறுதியை துாசு தட்டுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!





-ம.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி: ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகளை வைகோ மதிப்பதில்லை. கூட்டணி பேச்சு, தேர்தல் அறிவிப்பு துவங்கி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட ஆலோசனைக்கு கணேசமூர்த்தியை அழைக்கவில்லை. என்னதான் சங்கடங்கள் இருந்தாலும், வைகோ ஒரு முறை கூப்பிட்டு பேசி, சமாதானம் செய்திருந்தால், கணேசமூர்த்தி இப்படியொரு முடிவு எடுத்திருக்க மாட்டார்.

டவுட் தனபாலு: வைகோவை நம்பி வந்த பலரும் இப்படி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்காங்க... லோக்சபா தேர்தல் முடிஞ்சதும், ம.தி.மு.க.,வுல வைகோவும், அவர் மகனும் தான் இருப்பாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap