Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்: எங்கள் கட்சி தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். அ.தி.மு.க.,வில் இருந்த போது தாய்ப்பாலை குடித்துவிட்டு தி.மு.க.,விற்கு சென்று எதிராக விஷத்தை கக்குகிறார். இது மிகப்பெரும் பாவ செயலாகும். அ.தி.மு.க.,வில் எந்த இடைவெளியும், பிளவும் இல்லை.

டவுட் தனபாலு: ரகுபதி போன இடத்துக்கு விசுவாசமா இருக்காரு... அதுல, ஒண்ணும் தப்பில்லையே... நீங்க கூட, ஒரு காலத்துல சசிகலா முதல்வராகணும்னு, ஜெ., சமாதியில மொட்டை போட்டு வேண்டிக்கிட்டதை மறந்துட்டீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!



'யு டியூபர்' சவுக்கு சங்கர்: என் உயிருக்கு ஆபத்து உள்ளது, கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன். கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கைகளை உடைத்தார்.

டவுட் தனபாலு: சாதாரண மக்களை திட்டுனாலே, சரமாரி தர்ம அடி போடுவாங்க... போலீசாரை கேவலமா திட்டினா, உங்களுக்கு பூ எடுத்து போட்டு கும்பிடுவாங்களா என்ன... வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கிறதுக்கு வாழும் உதாரணம் நீங்க தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!





காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம்: பரம்பரை வரியை கொண்டு வர காங்கிரஸ் உறுதி அளித்துள்ளதாக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தேர்தல் அறிக்கையில், காங்., அந்த உறுதிமொழியை, எங்கேயும் அறிவிக்கவில்லை. காங்., அறிக்கையில், அந்த வாக்குறுதி இடம் பெற்றுள்ள பக்கத்தையும், அதன் பத்தியையும் உ.பி., முதல்வரால் காட்ட முடியுமா?

டவுட் தனபாலு: எந்த கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், வரியை ஏத்துவோம், கட்டணத்தை உயர்த்துவோம்னு வெளிப்படையா அறிவிச்சு, நீங்க பார்த்திருக்கீங்களா... எல்லாத்தையும் குறைப்போம்னு தான் வாக்குறுதி தருவாங்க... ஆட்சியில் அமர்ந்த பிறகு தான், வரி, கட்டணங்கள்ல, 'கை' வைப்பாங்க என்பது மூத்த அரசியல் தலைவரான தங்களுக்கு தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap