Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: காய்த்த மரத்தில் தான் கல்லடி படும் என்பது போல, தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். அவரது வாய் கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். அவரது உயரம் அவருக்கு தெரியவில்லை. தி.மு.க., திரும்ப தாக்க முயன்றால் அவர் தாங்க மாட்டார்.

டவுட் தனபாலு: சாதாரணமா இருந்த சீமானை, கைது பண்ணி ஒரு கட்சியின் தலைவராக மாற்றியது கருணாநிதியின் சாதனை... இப்பவும், சீமான் மேல ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்க என்றால், அது அவரது அரசியல் வளர்ச்சிக்கு உரமாகவே உதவும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி: 'தமிழகத்தில் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்கள் பல நல்ல திட்டங்களால் பயனடைந்துள்ளனர். அதன் காரணமாக இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.,விற்கு ஓட்டளித்து அமோக வெற்றியை தந்துள்ளனர். தேர்தலுக்கு முன், தி.மு.க., விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கவுதம சிகாமணி நியமிக்கப்பட்டார். அவரும், வேட்பாளர் சிவாவும் இணைந்து தேர்தல் பணியாற்றினர். விக்கிரவாண்டியில் சிவா பெற்றிருக்கும் வெற்றி இருவருக்குமானது.

டவுட் தனபாலு: விக்கிரவாண்டியில் தி.மு.க., பெற்ற வெற்றியில், உங்க மகனுக்கு பாதி பங்கு இருக்குன்னு சொல்றீங்களே... அப்படி என்றால், முதல்வரின் மகன் உதயநிதி அங்க வந்து பிரசாரம் செய்தது எல்லாம் வெற்றிக்கு எந்த வகையிலும் உதவலையா என்ற, 'டவுட்' எழுதே!



நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜா: சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, யோகா செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, பிரதமர் மோடி போல் உலகில் யாராலும் முடியாது. தண்ணீரே குடிக்காமல் மூன்று மணி நேரம் பேசும் மோடியை, பார்லிமென்டில் 13 முறை தண்ணீர் குடிக்க வைத்த பெருமை, முதல்வர் ஸ்டாலினையே சேரும்.

-டவுட் தனபாலு: பார்லிமென்ட் கதையை விடுங்க... தமிழகத்துல, முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தண்ணீர் குடிக்க வைக்கிறாரோ இல்லையோ... அந்த வேலையை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கனகச்சிதமா பண்ணிட்டு இருக்காரு என்பதில், 'டவுட்'டே இல்லை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap