Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர், கோவி.செழியன்: சமஸ்கிருதம், பேச்சு வழக்கு இல்லாத ஒரு மொழி. அம்மொழிக்கு ஊக்கத்தொகையாக நுாற்றுக்கணக்கான கோடிகளை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், உலக புகழ்பெற்ற செம்மொழியான தமிழுக்கு வெறும், 24 கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழ் விவகாரத்தில், பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த மத்திய அரசும் நாடகம் ஆடுகிறது.

டவுட் தனபாலு: ஒரு தாய்க்கு நாலஞ்சு பிள்ளைகள் இருந்தாலும், சவலை பிள்ளைக்கு தானே ஊட்டச்சத்தான உணவுகளை குடுப்பாங்க... அந்த மாதிரி, நல்லா வளர்ந்து செம்மொழி பெற்ற தமிழுக்கு குறைவாகவும், வளராம இருக்கிற சமஸ்கிருதத்துக்கு கூடுதலாகவும் நிதி வழங்கியதில் குறை காணலாமா என்ற, 'டவுட்' வருதே!

  



மாணவர் காங்., நிர்வாகிகள் மத்தியில், ராகுல் எம்.பி., பேச்சு: இன்றைய மாணவர்கள், நாளைய அரசியல் தலைவர் என்பதில் மாற்றம் இல்லை. நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில், கவுன்சிலர், நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ., - எம்.பி.,மாநில அமைச்சர், முதல்வர், மத்திய அமைச்சர், பிரதமர் போன்ற பதவிகளை பெற முடியும். அதற்காக, நீங்கள் லட்சிய உணர்வுடன் மக்கள் நலப்பணி, கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு: உங்க கட்சியில யாரும், எந்த பதவிக்கும் சட்டுன்னு வந்துட முடியுமா என்ன... என்ன தான் கட்சிக்காக உழைச்சு, களைச்சிருந்தாலும், உங்க குடும்பத்தின் பரிபூரண ஆசி இருந்தால் தானே, எந்த பதவியும் கிடைக்கும்... மல்லிகார்ஜுன கார்கே, உங்க கட்சியின் தலைவரா இருந்தாலும், 'லகான்' உங்க கையில் இருப்பதுவே இதற்கு சாட்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!

  

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, 'மாஜி' எம்.எல்.ஏ., விஜயகுமார்: பா.ஜ.,வினர் என் காரை வழிமறித்து, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து கேட்டனர். 'எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அ.தி.மு.க., கொள்கை தான் என் கொள்கை' என சொன்னேன். ஆனாலும்,உள்ளூர், பா.ஜ.,வினர் வற்புறுத்தியதால், கையெழுத்து போட்டு விட்டேன்.

டவுட் தனபாலு: அது சரி... 'வற்புறுத்தி கேட்டதால், கையெழுத்து போட்டேன்'னு சொல்றீங்களே... நாளைக்கே, உங்க சொத்துக்களை யாராவது அவங்க பெயருக்கு மாத்தி எழுதிட்டு, வற்புறுத்தி கேட்டாலும் இந்த மாதிரி கையெழுத்து போட்டு கொடுத்துடுவீங்களா என்ற, 'டவுட்' வருதே!

  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap