Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : நவ 30, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையன்: கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது, அவர் பின்னால் அணிவகுத்த தொண்டர்களில் நானும் ஒருவன். ஆனால், இன்றைய நிலை வேறு. இன்று, அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டு கட்சிகளும் வேறல்ல; இரண்டுமே ஒன்று தான். ஒன்றாக இணைந்து தான் பயணம் செய்கின்றன.

டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்'னு காங்., கட்சியின் முன்னாள் முதல்வர் காமராஜர் ஏற்கனவே சொல்லிட்டார்... 'நம்மை தவிர வேற யாரும் ஆட்சியில் அமர்ந்துடக் கூடாது... கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவே கூடாது' என்ற கொள்கைகளில் ரெண்டு திராவிட கட்சிகளுமே உறுதியாக இருப்பதால், நீங்க சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை என்பதில், 'டவுட்'டே இல்லை!

lll

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக, 50 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருந்த செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். அவரது அரசியல் அனுபவம், களப்பணி ஆகியவை, த.வெ.க.,வுக்கு உறுதுணையாக இருக்கும். அவருடன், த.வெ.க.,வில் கைகோர்க்கும் அனைவரையும் வரவேற்கிறேன். நல்லதே நடக்கும்; நல்லது மட்டும்தான் நடக்கும். வெற்றி நிச்சயம்.

டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியின் கொள்கைகளால ஈர்க்கப்பட்டு, செங்கோட்டையன் உங்க பக்கம் வந்த மாதிரி தெரியலையே... எம்.ஜி.ஆர்., - ஜெ., மாதிரி சினிமா பிரபலங்கள் தலைமையில் பணிபுரிந்த ராசிதான் தனக்கு, 'ஒர்க் அவுட்' ஆகும்னு நினைச்சு, உங்க கட்சிக்கு வந்துட்டாரோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: விஜய் தற்போது நடிகராகவே உள்ளார். கட்சி துவங்கியவுடன், 'லாங் ஜம்ப், ஹை ஜம்ப், உலகத்தை தாண்டுவோம்' என சொல்வது பொருத்தமில்லை. ஒரு தேர்தலில் நின்று தன் பலத்தை நிரூபிக்கட்டும். எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவராக கட்சி தொடங்கினார்; விஜய் நடிகராகத் தான் கட்சி துவங்கியுள்ளார்.

டவுட் தனபாலு: எம்.ஜி.ஆர்., என்ற ஆளுமைக்கு முன்னாடி யாரும் நிற்கக்கூட முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை... 20 வருஷ அரசியல் அனுபவத்துக்கு பிறகே எம்.ஜி.ஆர்., தனி கட்சி துவங்கினார்... ஆனா, சந்திக்கிற முதல் தேர்தல்லயே முதல்வராகணும் என்ற விஜயின் பகல் கனவு பலிக்குமா என்பது, 'டவுட்'தான்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap