Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 09, 2026 02:26 AM

Follow on Google

PUBLISHED ON : பிப் 09, 2026 02:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ம.க., தலைவர் அன்புமணி: புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக்கு, மாணவியர் உணவுக்கான நிதி, கடந்த டிசம்பருக்கு பின் வழங்கவில்லை. விடுதியில் அரிசி, காஸ் சிலிண்டர் மட்டுமே இருப்பதால், இரு மாதங்களாக சோறு மட்டும் வடித்து, சொந்த செலவில் ஊறுகாய் அல்லது, 'சிப்ஸ்' வாங்கி, மாணவர்களுக்கு வழங்குவதாக, விடுதி பணியாளர்கள் கூறுகின்றனர். தி.மு.க., ஆட்சியில், அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதற்கு, இதை விட மோசமான உதாரணம், வேறு இருக்க முடியாது.

டவுட் தனபாலு: அடப்பாவமே... கொலை, கொள்ளை செஞ்சுட்டு ஜெயிலுக்கு போனவங்களுக்கே, வாரத்தில் ரெண்டு நாள் சிக்கன் குழம்போட சாப்பாடு போடுறாங்க... நாட்டின் எதிர்கால துாண்களான மாணவியருக்கு, ரெண்டு மாசமா வெறும் சோத்தை போட்டது தான் திரா விட மாடல் ஆட்சியின் சாதனையா என்ற, 'டவுட்' வருதே!



தமிழக, பா.ஜ., அறிக்கை: தமிழ்மொழி குறித்து, ஈ.வெ.ரா., பேசிய இழிவான கருத்துகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டியது வரலாற்று உண்மை. அதை, 'அமைச்சரின் சொந்த கருத்து' என்று பார்லிமென்டில் நடிகர் கமல் பொய் பேசியது, அதுவும், முதல் பேச்சிலேயே பேசியது, பெரும் கண்டனத்திற்கு உரியது. ஈ.வெ.ரா.,வின் பேச்சுகளை கூட சரியாக படிக்காமல், வசனகர்த்தாக்கள் கொடுத்த காகிதத்தை வைத்து, அரசியல் செய்யும் கமலை, பார்லிமென்டுக்கு அனுப்பிய, தி.மு.க.,வை என்னவென்று சொல்வது?

டவுட் தனபாலு: கமல் தனித்து போட்டியிட்டிருந்தா, பார்லிமென்ட் வாசலைக் கூட மிதிச்சிருக்க முடியாது... ஏதோ, தி.மு.க., புண்ணியத்துல, ராஜ்யசபா எம்.பி.,யாகிட்டாரு... தி.மு.க., தலைமையின் மனம் குளிர, அவர் பேசிய பேச்சை வசனகர்த்தாக்கள் எழுதி தந்தாங்களா அல்லது தி.மு.க., தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில் எழுதி குடுத்தாங்களா என்ற, 'டவுட்'தான் வருது!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; போதுமான ஊழியர்களை நியமிக்க வேண் டும்' என கோரி, 'டாஸ்மாக்' ஊழி யர்கள் போராடி வருகின்றனர். ஆனால், அந்த கோரிக்கைகளை, தி.மு.க., அரசு நிறைவேற்ற வில்லை. இதை கண்டித்து, அ.தி. மு.க., அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், வரும், 11ம் தேதி காலை, சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்து, எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணி நடத்தப்படும்.

டவுட் தனபாலு: நல்லா நடத்துங்க... ஆனா, இதே கோரிக்கையை உங்க ஆட்சியிலும், 'டாஸ்மாக்' ஊழியர்கள் வச்சுட்டு தானே இருந்தாங்க... அப்ப எல்லாம் அவங்களை பணி நிரந்தரம் பண்ணாம, எதிர்க் கட்சியானதும், போராடுறது நியாயமா என்ற, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap