Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : பிப் 16, 2026 03:05 AM

Follow on Google

PUBLISHED ON : பிப் 16, 2026 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம்: தமிழகத்தில், மகளிர் உரிமைத்தொகை பெறக்கூடிய அனைத்து குடும்பங்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மகளிருக்கு, 5,000 ரூபாய் வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு தரப்பில் இருந்து தடை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான், வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்த பின், இது தொடர்பான தகவலை முதல்வர் வெளியே தெரிவித்துள்ளார்.

டவுட் தனபாலு: அதாவது, பிப்., மார்ச், ஏப்ரல் மாத தொகை, 3,000த்துடன், கோடை கால செலவுகளுக்காக, 2,000 ரூபாயை சேர்த்து, 5,000 ரூபாயா முதல்வர் தந்திருக்காரு... போன வருஷம் கோடை காலம் வந்தப்ப, 2,000 ரூபாய் தராதது ஏன்... சரி, அடுத்த வருஷம் கோடைக்கும், 2,000 ரூபாய் தருவாரா என ஏகப்பட்ட, 'டவுட்'கள் எழுதே

lll

பத்திரிகை செய்தி: கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலர்கள் பரிந்துரைத்தவர்களுக்கு, 'சீட்'கள் வழங்கப்பட்டன. ஆனால், இம்முறை கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமியின் மச்சான் வெங்கடேஷ் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தான், வேட்பாளர் தேர்வில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்வு செய்தவர்களின் பட்டியல், பழனிசாமியின் மகன் மிதுன் கைகளுக்கு செல்கிறது. அவர் கை காட்டும் ஆட்கள் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

டவுட் தனபாலு: அது சரி... மச்சான், மகனை விட்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய சொல்லிட்டு, தி.மு.க.,வை பார்த்து, 'வாரிசு அரசியல், குடும்ப அரசியல்' என்று பழனிசாமி குற்றம் சாட்டுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!

lll

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், செல்லுார் ராஜு: எந்த கட்சியையும் இரண்டாக பிரிக்கக் கூடியவர்கள், தி.மு.க.,வினர். ஏற்கனவே, கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக பிரித்தனர். காங்கிரசார் இப்போது, தி.மு.க.,வுக்கு எதிராக போர்க்குரல் எழுப்புகின்றனர். திருமாவளவன் போர்க்குரல் எழுப்பாமல் அடங்கி விட்டார். போர்க்குரல் எழுப்பினால், தனது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை, தி.மு.க., இரண்டாக உடைத்து விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்.

டவுட் தனபாலு: அது சரி... 2011ல், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அப்புறமா ஜெ., அரசை விமர்சனம் செஞ்சாரு... உடனே, அந்த கட்சியின், ஏழு எம்.எல்.ஏ.,க்களை தனியா இழுத்து, தே.மு.தி.க.,வை ஜெ., உடைச்சதை இவர் மறந்துட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap