Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 06, 2026 02:51 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 06, 2026 02:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. முடிவு செய்ததும், ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். அதுவரை கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். இன்னும் சில நாட்களில், பா.ம.க.,வின் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படும். அப்போது, தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும்.

டவுட் தனபாலு: தமிழகத்தையே பரபரப்பாக்கும் அளவுக்கு, எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போறீங்க... ஒருவேளை, புதுசா கட்சி துவங்கியிருக்கும் உங்க பழைய பங்காளி பண்ருட்டி ராமச்சந்திரன் அல்லது சசிகலா கட்சியுடன் கூட்டணி சேர போறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி: அ.தி.மு.க., கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், ஆறு தனி தொகுதிகளை தேர்வு செய்து கொடுத்துள்ளோம். அதில் நான்கு தொகுதிகள் கொடுக்க வேண்டும் என, அழுத்தம் கொடுத்துள்ளோம். நான்கு தொகுதிகளை கொடுப்பர் என எதிர்பார்க்கிறோம்.

டவுட் தனபாலு: கடந்த தேர்தலில், உங்களுக்கு மட்டும் ஒரே ஒரு சீட் கொடுத்து, நீங்களும் ஜெயித்து எம்.எல்.ஏ., ஆகியிருக்கீங்க... இப்ப, தடலாடியா நாலு தொகுதிகள் கேட்கிறீங்களே... அந்த அளவுக்கு உங்க கட்சி வளர்ந்துடுச்சா அல்லது அ.தி.மு.க., கூட்டணியில் நிறைய கட்சிகள் இல்லாததால, நாம கேட்டது கிடைக்கும்னு நம்புறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!

சேலம் மத்திய மாவட்ட ம.தி.மு.க., பொருளாளர் மணிகண்டன்: புதிதாக தி.மு.க., கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க., மற்றும் கமல் கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்தனர். ம.தி.மு.க.,வுக்கு கைவிரித்து விட்டனர். கடந்த முறை தந்த ஆறு சட்டசபை தொகுதிகளை குறைத்து, மூன்று அல்லது நான்கு தொகுதி என்ற அளவில் சுருக்கி, ம.தி.மு.க.,வை அழிக்கும் வேலையை தி.மு.க., செய்கிறது. எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., வெளியேற வேண்டும்.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிட்டா, ம.தி.மு.க., எங்க போக முடியும்... இவ்வளவு நாள் திட்டி தீர்த்த அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், பக்கத்துலயே சேர்த்துக்க மாட்டாங்க... அதை விட்டா, நடிகர் விஜய் கட்சி மட்டும் தான் ஒரே வாய்ப்பு... அங்க போனா, உங்க கட்சிக்கு, 10க்கும் மேற்பட்ட சீட்களை வாரி வழங்குவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap