Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 12, 2026 02:43 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 12, 2026 02:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இலவசங்கள் பெற வேண்டிய நிலையில் இருந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன் என்று யாரும் சொல்வதில்லை. சொல்லும் எங்களையும் கவனிப்பதில்லை. தீபாவளிக்கு ஒரே நாளில், 760 கோடி ரூபாய்க்கு மேல் மது குடிக்க, மக்கள் பணம் வைத்திருக்கின்றனர். விஜய் படம் வந்தால், முதல் நாள் முதல் காட்சி, 34 கோடி ரூபாய் வசூலாகிறது. பொழுதுபோக்கிற்கும், மதுவிற்கும் செலவு செய்ய பணம் வைத்திருப்போருக்கு, எதற்கு இலவசம் கொடுக்கிறீர்கள்?

டவுட் தனபாலு: பண்டிகை நாட்களில் தாராளமா மது குடித்து செலவழிக்கவும், சினிமா பார்க்கவும் தானே இலவசங்களை வாரி விடுறாங்க... அரசு ஒருபக்கம் இலவசமாக தருவது, மறுபடியும் அவங்க கஜானாவுக்கே கலால் வரி, கேளிக்கை வரியா வந்துடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!



அகில இந்திய காங்., செயலர் நிவேதித் ஆல்வா: தி.மு.க.,வுடன் சுமுகமாக பேச்சு நடத்தி, காங்கிரசுக்கு 28 சட்டசபை தொகுதிகளை பெற்றுள்ளோம். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. இதனால், எங்கள் கூட்டணியை பார்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பொறாமையில் இருக்கிறார்.

- டவுட் தனபாலு: தி.மு.க., 25 சீட்கள் தருவதாக சொல்லி, நீங்க கடும் போராட்டம் நடத்தி, மூணு சீட்களை மட்டும் தான் கூடுதலா வாங்கியிருக்கீங்க... ஆனாலும், நீங்க நடத்திய கறார் பேரத்தை, தி.மு.க.,வினர் யாரும் லேசுல மறக்க மாட்டாங்க... அதனால, 28 இடங்கள்லயும் நீங்க வெற்றி பெற, தி.மு.க.,வினர் முழுமூச்சா வேலை செய்வாங்களா என்பது, 'டவுட்'தான்!

பத்திரிகை செய்தி: 'த.வெ.க., தலைவர் விஜய், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும்' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை வெளியிட்டிருந்தார். 'த.வெ.க., உடன் பேச்சு நடத்தவில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், பிரசாத் கருத்து அதற்கு எதிர்மறையாக இருந்தது. இதனால், செய்தி தொடர்பாளர் மற்றும் தேர்தல் பணி குழு பொறுப்பு ஆகியவற்றில் இருந்து, பிரசாத்தை, நயினார் நாகேந்திரன் நீக்கியுள்ளார்.

டவுட் தனபாலு: அரசியல் வரலாற்றில், 'கூட்டணியை விட்டு வெளியே போங்க'ன்னு சொன்னவங்க பதவிகளை பறிச்சுதான் பார்த்திருக்கோம்... இங்க என்னடான்னா, கூட்டணிக்கு கூப்பிட்டதுக்கே பதவியை பறிச்சுட்டாங்களே... 'தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிக்கு வரணும்'னு தமிழக பா.ஜ.,வில், 'ஸ்லீப்பர் செல்'களா யாரும் செயல்படுறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap