Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 24, 2026 02:56 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 24, 2026 02:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: யார் எப்படி விமர்சித்தாலும், அதை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 173 இடங்களில் போட்டியிட்டது. தற்போது, 'நாங்களும் தொகுதிகளை வெகுவாக குறைக்கிறோம். நீங்களும் விட்டு கொடுங்கள்' என, தி.மு.க., தரப்பில் கேட்டுள்ளனர். வலியும் இருக்கிறது; வலிமையும் இருக்கிறது. விரைவில் சுமுகமாக பேச்சு முடியும்.

* டவுட் தனபாலு: 'இரட்டை இலக்கத்தில், அதாவது, 10 தொகுதிகளுக்கு மேல தந்தால் தான் ஆச்சு'ன்னு ஒத்தக்கால்ல நின்னீங்களே... கடைசியில, பேசி பேசி உங்களை வழிக்கு கொண்டு வந்துட்டாங்களா... உங்க கட்சி வலிமை அடைஞ்சுடக் கூடாது என்ற தி.மு.க.,வின் பெரியண்ணன் மனோபாவம் உங்களுக்கு புரியலையா என்ற, 'டவுட்' தான் வருது!



பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு: காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கூட, சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கைகளை அனுப்பி வைக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் இருந்து, சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை கேட்டு, எந்த கோரிக்கைகளையும் தி.மு.க., அரசு அனுப்பியதில்லை.

* டவுட் தனபாலு: கோரிக்கைகளை அனுப்பினா மட்டும் நிதியை ஒதுக்கிடுவீங்களா... கல்வி, வெள்ள நிவாரணம்னு தமிழக அரசு கேட்ட எந்த நிதியுதவியையும் தராம இருந்துட்டு, இப்ப கேட்காதது தான் குற்றம்னு சொல்லி, நல்லாவே அரசியல் பண்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



பத்திரிகை செய்தி: 'அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற கட்சியை துவக்கியுள்ள சசிகலாவும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும் கூட்டணி அமைத்துள்ளனர். பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு, அக்கட்சியின் மாம்பழம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. இதனால், வரும் தேர்தலில் பா.ம.க.,வின் பெயர், கொடி, மாம்பழம் சின்னத்தை ராமதாஸ் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சசிகலா கட்சியின் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட, ராமதாஸ் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

* டவுட் தனபாலு: அடடா... ஒரு காலத்தில், தமிழக அரசியலையே ஆட்டிப் படைச்ச ராமதாஸ் நிலை இப்படி ஆகிடுச்சே... தென்னந்தோப்பு சின்னத்துல நிற்கும் ராமதாஸ் அணி வேட்பாளர்களுக்கான செலவை எல்லாம் சசிகலாவே ஏத்துக்கிறதா சொல்லிட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap