Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : மார் 31, 2026 03:44 AM

Follow on Google

PUBLISHED ON : மார் 31, 2026 03:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், எங்கள் வேட்பாளர்கள் தனித்து நின்று கணிசமான ஓட்டுகளை பெற்றனர். அப்போதே, அ.தி.மு.க., - அ.ம.மு.க., - பா.ஜ., இணைந்து போட்டியிட்டிருந்தால், நிச்சயம் ஆட்சி அமைத்து இருப்போம்; தற்போது கூட்டணி சேர்ந்துள்ளோம். தி.மு.க., அமைச்சர்களின் பண பலத்தை தாண்டி, எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்.

டவுட் தனபாலு: 'கடந்த 2021ல் கூட்டணி அமைக்கலாம்னு பழனிசாமியிடம் தலை தலையா அடிச்சுக்கிட்டோம்... அதை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டுட்டார்... 2021ல் விட்டதை இந்த தேர்தல்ல பிடிச்சிடுவோம்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!



காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம்: வரும் தேர்தல், மதச்சார்பற்ற தி.மு.க., கூட்டணிக்கும், தே.ஜ., கூட்டணிக்கும் இடையிலான போட்டி. எம்.ஜி.ஆர்., விஜயகாந்துக்கு கிடைத்தது போல், ரசிகர்களின் ஓட்டுகள் விஜய்க்கு வராது. ஒரு தொகுதியிலும் அவரால் வெற்றி பெற முடியாது. தேர்தலில், 12 சதவீத ஓட்டுகள் மட்டுமே வாங்க முடியும். தமிழக சட்டசபை தேர்தல், ஒரு சார்பாக இருக்காது; கடும் போட்டி இருக்கும். தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும்.

டவுட் தனபாலு: ஏற்கனவே, தமிழக ஆட்சியில் பங்கு தரணும்னு சில காங்., தலைவர்கள் கேட்டுட்டு இருந்தாங்க... 'அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை... வழக்கம் போல, தி.மு.க.,வே தனித்து ஆட்சி அமைக்கும்'னு அவங்களுக்கு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!



அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க.,வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என, ஒரே குடும்பத்தில் இருப்போர் மட்டுமே கட்சியிலும், அதிகாரத்திலும் இருக்க முடியும். அ.தி.மு.க., மக்களுக்காக பாடுபடும் கூட் டணி; தி.மு.க., கூட்டணி, வெற்றுக் கூட்டணி. உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் எண்ணம்; அதை , தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

டவுட் தனபாலு: இப்படித்தான், 'ஸ்டாலினும் முதல்வராக முடியாது'ன்னு உங்க கட்சியினர் சொன்னாங்க... ஆனா, அந்த கட்சியில் கருணாநிதி குடும்பத்தை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிறாங்களே... உதயநிதி இல்லை, எதிர்காலத்தில் அவரது மகன் இன்பநிதியின் அரசியல் வருகையை கூட, யாராலும் தடுக்க முடியுமா என்பது, 'டவுட்' தான்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap