Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : ஏப் 23, 2026 12:29 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 23, 2026 12:29 AM

3


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்: நமக்கு புத்தகங்கள் எப்போதும் துணை நிற்கும். 100 சதவீதம் நமது அறிவை பயன்படுத்த தொடங்கினால், நம்மை யாராலும் வெல்ல முடியாது. முதல்வர் ஸ்டாலின் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஐந்து ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

டவுட் தனபாலு: கல்வித் துறைக்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது நல்ல விஷயம் தான்... ஆனா, இப்படி கல்வித் துறைக்கு அள்ளி கொடுத்ததை, 'டாஸ்மாக்' மது விற்பனையில் ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய் வீதம், ஐந்து ஆண்டுகளில், 2.50 லட்சம் கோடி ரூபாயாக திருப்பி எடுத்துட்டாங்க என்பதுதான், 'டவுட்' இல்லாத உண்மை!

தமிழக முதல்வர் ஸ்டாலின்: பெரம்பூர் தொகுதி மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்பு கிறேன்... உங்கள் வீட்டு ஊழியனாக, உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து பணியாற்றும் ஒருவர் வேண்டுமா அல்லது எங்கிருந்தோ புதிதாக அரசியலுக்கு வந்து, நாடகம் நடித்துக் கொண்டிருப்பவர் வேண்டுமா என, சிந்தித்துப் பாருங்கள். நான் யாரையும் அரசியலில் தாக்கியும், விமர்சித்தும் பேச விரும்பவில்லை. அந்த பழக்கமும் எனக்கு கிடையாது. யாரையும் எதிர்த்து, தரக்குறைவாக பேசும் வழக்கம் எனக்கு கிடையாது.

டவுட் தனபாலு: அது சரி... 'மத்திய பா.ஜ., அரசின் அடிமை பழனிசாமி, பாதம் தாங்கி பழனிசாமி, நம்பியவர்களை நட்டாற்றில் விட்ட துரோகி பழனிசாமி' என்றெல்லாம், தேர்தல் பிரசாரத்தில் ஆவேசமா பேசினீங்களே... இவை எல்லாம், உங்க அகராதியில் நாகரிகமான விமர்சனங்களா என்ற, 'டவுட்' வருதே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தேர்தல் களத்தில், ஒரு துரோக கூட்டம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது; அந்த துரோகி, என் மகன் அன்புமணி. அவர்களின் நோக்கம், மக்களுக்கு சேவை செய்வது அல்ல; அதிகாரம் கைக்கு வரும்போது, பணம் பண்ணுவது தான். அவர்கள் வாயிலாக, 18 தொகுதிகளில் போட்டியிடுவோர், நான் வளர்த்த பிள்ளைகள் தான். ஆனால், பணத்திற்காக அன்புமணியிடம் போய் நிற்கின்றனர். எனவே, நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்; 18 தொகுதி களிலும் அவர்கள் தோற்கடிக்க ப்பட வேண்டும்.

டவுட் தனபாலு: 'அன்புமணி அணி வேட்பாளர்களை தோற்கடித்து, நல்லவர்களை தேர்வு செய்யுங்க'ன்னு கேட்கிறீங்களே... நீங்களும், சசிகலா கட்சியும் கூட்டணி அமைத்து நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கன்னு கேட்கலையே... அவங்க எல்லாம் நல்லவங்க இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap