Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : மே 27, 2026 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : மே 27, 2026 12:00 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்: காலி பாட்டில்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி திரும்ப பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது, நீண்டகால அடிப்படையில் மட்டுமே முடியும். மதுவிலக்கை முற்றிலும் அமல்படுத்த முடியாது. அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிட்டால் சாராயமும், கஞ்சாவும் பெருகி விடும். 'டாஸ்மாக்' கடைகளை முறைப்படுத்தி வருவாய் ஈட்ட முயற்சிப்போம்.

டவுட் தனபாலு: குஜராத்திலும், பீஹாரிலும் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கே... அந்த மாநிலங்களில் எல்லாம் சாராயமும், கஞ்சாவும் பெருகிடுச்சா என்ன...? ஆட்சி நிர்வாகமும், போலீசாரும் உங்களிடம் இருக்கிறப்ப, இந்த மாதிரி சால்ஜாப்புகள் சொல்றது சரியா என்ற, 'டவுட்'தான் வருது!

lll

தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு: 'மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை' என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியது, அவரது ஆணவ போக்கை காட்டுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து பலவீனமான கூட்டணி அரசு அமைந்துள்ளது என்ற எண்ணத்தில், அவர் பேசியது போல தெரிகிறது. தங்கள் காங்கிரஸ் கட்சியும், தமிழக ஆட்சியில் அங்கம் வகிப்பதால், எதிர்ப்பு இருக்காது என நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார். அவரது பேச்சுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: இதே சிவகுமார், தமிழகத்தில் உங்க ஆட்சி நடந்தப்பவும் மேகதாது அணை பற்றி பலமுறை பேசியிருக்காரு... அப்ப எல்லாம், கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி மவுனியா இருந்துட்டு, இப்ப காங்., உங்களை கழற்றி விட்ட கோபத்தை நல்லாவே காட்டுறீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!

lll

வி.சி., கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு: நேற்று வரை, 'ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., பெற்றெடுத்த பிள்ளை' என த.வெ.க.,வை கடுமையாக விமர்சித்த திருமாவளவன், இன்று தன் கொள்கைகளில் தடம் மாறி விட்டார். நிலைப்பாடுகளை அவ்வப்போது மாற்றி, குழப்பத்துடன் செயல்படும் தலைமையின் கீழ் இனியும் பயணிக்க முடியாது என்பதால், வி.சி.க.,வில் இருந்து விலகுகிறேன்.

டவுட் தனபாலு: அது சரி... த.வெ.க.,வின் எழுச்சி, பல கட்சிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வச்சிருப்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... திருமாவளவன், த.வெ.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தா, அவரது கட்சியில் இருந்தும் பலர் த.வெ.க.,வுக்கு தாவியிருப்பாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap