Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : ஜூன் 06, 2026 12:09 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2026 12:09 AM

3


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்திக்க, முதல்வர் விஜய் நேரம் கேட்டதாகவும், பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை எனவும், அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். ஆனால், பழனிசாமியையோ, அவரது அலுவலகத்தையோ முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. முதல்வர் விஜய், தனது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்ற நிலையில், முதலில் பழனிசாமியை சந்தித்திருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: அதுவும் சரிதான்... 'முதல்லயே பழனிசாமியை விஜய் வந்து பார்த்திருந்தார் என்றால், அவரது அரசுக்கு நாங்களே ஆதரவு குடுத்திருப்போம்... எங்க கட்சியிலும் பிளவு வந்திருக்காது... அதை செய்ய விஜய் தவறிட்டார்'னு சொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே!

பத்திரிகை செய்தி: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ல், ஆண்டுதோறும் சென்னை மாவட்ட தி.மு.க., சார்பில், பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. கூட்டணி கட்சிகள் எல்லாம், முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., பக்கம் சென்று விட்டன. இதனால், இந்த ஆண்டு கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை, தி.மு.க., தலைமை ரத்து செய்து விட்டது.

டவுட் தனபாலு: அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி சந்திக்காத தோல்விகளா...? ஆனா, அது பற்றி கவலைப்படாமல், வழக்கம் போல தன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்துல பங்கேற்று, தானும் உற்சாகமாகி, கட்சியினரையும் உற்சாகப்படுத்துவார்... தோல்வியில் துவண்டு போகாமல் இருக்கும் கலையை, தன் தந்தையிடம் ஸ்டாலின் கத்துக்கலையோ என்ற, 'டவுட்'தான் வருது!

பா.ம.க., தலைவர் அன்புமணி: மஹாராஷ்டிராவில், பயிர்க்கடனாக விவசாயிகள் வாங்கியிருந்த 36,585 கோடி ரூபாயை அம்மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, 2,044 கோடி ரூபாய் பயிர்க்கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது. அங்கு சாத்தியமாகும் கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்?

டவுட் தனபாலு: மஹாராஷ்டிராவில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்குது... அதனால, மத்திய பா.ஜ., அரசும் தாராளமா நிதியுதவி செய்யும்... நீங்க இப்ப, தே.ஜ., கூட்டணியில் தானே இருக்கீங்க... மத்திய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு நிதியுதவி வாங்கி குடுத்துட்டு, தமிழக அரசை கேள்வி கேட்டால், 'டவுட்' இல்லாம உங்களை பாராட்டலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap